நடிகர் யோகிபாபு நடிக்கும் பொம்மைநாயகி படத்தின் படப்பிடிப்பு யாவும் நிறைவு- கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு

179

தமிழ் சினிமாவில் பல முன்னணி காமெடி நட்சத்திரங்கள் காணப்படுகின்றார்கள். அவர்களில் தற்பொழுது வளர்ந்து வரும் நடிகராகவும் அதிக இளம் ரசிகர்களைக் கவர்ந்த நடிகராக இருப்பவர் நடிகர் யோகிபாபு . இவர் சினிமாவில் தனக்கென்ற ஓர் இடத்தைப் பிடிக்க பல இன்னல்களை அனுபவித்தார் என்பதும் அனைவரும் அறிந்ததே.

மேலும் பல படங்களில் தொடர்ச்சியாக பிசியாக நடித்து வரும் யோகி பாபு அஜித்தின் வலிமை, விஜய்யின் பீஸ்ட், சிவகார்த்திகேயனின் அயலான் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் ஒன்றாக வளர்ந்து வருகிறது. அந்த நிறுவனத்தின் தயாரிப்பில் இப்போது ஐந்துக்கும் மேற்பட்ட படங்கள் உருவாகி வருகின்றன. அதில் ஒன்றாக யோகி பாபு நடிக்கும் பொம்மைநாயகி என்ற படமும் உள்ளது.

இந்த படத்தை அறிமுக இயக்குனரான ஷான் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது முழுவதும் நிறைவடைந்துள்ளதை அடுத்து படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். அப்போது எடுத்த புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருவதையும் காணலாம்.