• Oct 09 2024

திருமண பந்தத்தில் இணைந்த அடியே திரைப்பட இயக்குநர் விக்னேஷ்- வெளியாகிய வெடிங் போட்டோஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் இயக்குநர்களில் ஒருவர் தான் விக்னேஷ் கார்த்திக்.திட்டம் இரண்டு’  என்னும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புப் பெற்றது.


இதனை அடுத்து இவரது இயக்கத்தில் அண்மையில் வெளியாகிய திரைப்படம் தான் அடியே.இதில் ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக, நடிகை கௌரி கிஷன் நடித்திருந்தனர்.


இவர்களுடன் இயக்குநரும், நடிகருமான வெங்கட் பிரபு. புதுமுக நடிகர் மதும்கேஷ், மிர்ச்சி விஜய்  உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார்.இப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புப் பெற்றுள்ளது.


இந்த நிலையில் இன்றைய தினம் இவரின் திருமணம் நடந்துள்ளது. இதனால் திரையுலகப் பிரபலங்கள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருவதோடு இவரின் திருமணப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement