• Apr 19 2024

கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையில் கடுமையான மோதல்- செம குஷியில் நடனமாடும் மயூ மற்றும் ராதிகாவின் அம்மா- வைரலாகும் வீடியோ

stella / 11 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கம் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது.தற்பொழுது பாக்கியா மீதும் கோபி மீதும் ராதிகா அடிக்கடி கோபப்பட்டு சண்டையிட்டும் வருகின்றார்.

இப்படியான நிலையில்  இனியா பெஸ்ட் ஸ்டுடென்ட்டாக தேர்வானதால் கோபி செம குஷியில் இருக்கின்றார். இனியாவை எப்படியாவது தன்னுடன் பேச வைத்து விட வேண்டும் என்று இனியாவுக்கு டீ எல்லாம் போட்டுக் கொடுத்து நைஷா பேசி  வருகின்றார்.


இனியாவுடன் கோபி பேசுவதைப் பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாமல் ராதிகா கோபியுடன் சண்டை போட்டு வருவதோடு கோபியின் போனையும் கீழே போட்டு உடைத்து விடுகின்றார்.இதனால் இருவருக்கும் இடையில் மோதலும் ஏற்பட்டு வருகின்றது.

இப்படி ஒரு புறம் இருக்க ராதிகாவின் அம்மாவும் மகளுமான மயூவும் சேர்ந்து டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனைப் பார்த்த ரசிகர்கள் ராதிகா போனதில இருந்து நீங்க ரெண்டு பேரும் குஷியாக இருக்கிறீங்க போல எனக் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement