• Apr 25 2024

மோசமான உடல்நிலையில் பிதாமகன் பிரபலம்... நன்றி மறக்காத சூர்யா ..மற்றவர்கள் எங்கே..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 விஜயகாந்த் முதல் சூர்யா வரை பல நடிகர்களின் படத்தை தயாரித்து வழங்கியவர் தான் தயாரிப்பாளர் வி.ஏ.துரை. தற்போது ஒரு உதவி கோரி வீடியோ ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது.

இவர் விஜயகாந்த் நடித்த ’கஜேந்திரா’ என்ற திரைப்படம் உள்பட பல திரைப்படங்களை தயாரித்தவர் . இவர் தயாரித்த விக்ரம், சூர்யா நடித்த ’பிதாமகன்’ திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது அனைவருக்குமே தெரிந்த ஒன்று.

இவ்வாறுஇருக்கையில்  இவர் தயாரித்த ஒரு சில படங்களால் நஷ்டம் ஏற்பட்டதன் காரணமாக தற்போது அவர் வறுமையில் வாடுகிறார். அத்தோடு  அவர் நீரிழிவு நோயால் தவித்து வருவதாகவும் அவருக்கு சிகிச்சைக்கு கூட பணம் இல்லை என்றும் அவரது நண்பர்கள் கூறியுள்ளனர்.


தற்போது அவரது நண்பர்கள் அவரை ஒரு வீட்டில் தங்க வைத்து இருப்பதாகவும், அவருக்கு தகுந்த சிகிச்சை அளிக்க பெரும் தொகை தேவைப்படுவதால் திரையுலகினர் அவருக்கு கொடுத்து உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் இது குறித்த வீடியோவும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் தயாரிப்பாளர் வி.ஏ.துரை நிலையை அறிந்து நடிகர் சூர்யா அவரது சிகிச்சைக்காக ரூபாய் 2 லட்சம் வழங்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement

Advertisement

Advertisement