• Mar 25 2023

மயில்சாமி வீட்டிலும் செல்பி எடுக்க முயன்ற ரசிகர்கள்- கடுப்பாகி சூரி சொன்ன பதில்

stella / 1 month ago

Advertisement

Listen News!


பிரபல காமெடி நடிகர் மயில்சாமி திடீர் மரணம் அடைந்திருக்கும் சம்பவம் திரைத்துறை மற்றும் ரசிகர்கள் மத்தியில் வெறும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா சோகத்தையும் முதல் தற்போது சந்தானம், சூரி வரை காமெடிக்கு பஞ்சம் இல்லாத படங்களை கொடுத்து வருகிறது. காலத்திற்கு பல காமெடி நடிகர்கள் வந்து முத்திரை பதித்து வருகின்றனர். காமெடி நடிகர்கள் என்றதும் நம் நினைவிற்கு வருவது கவுண்டமணி செந்தில், விவேக், வடிவேலு, சந்தானம் என்று இவர்கள் தான் நினைவிற்கு வரும்.

 நடிகர், காமெடியன், நிகழ்ச்சி தொகுப்பாளர், சமூக சேவகர் என்ற பன்முகங்களை கொண்டவர் நடிகர் மயில்சாமி.இதுவரை இவர் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் நேற்றைய தினம் மாரடைப்பு காரணமாக இறப்புக்குள்ளார்.இந்த சம்பவம் திரையுலகினரை மட்டுமல்லாது ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


இந்நிலையில்  மயிலசாமியின் மறைவுக்கு ரஜினி, கார்த்தி, உதயநிதி ஸ்டாலின், நாசர், சூரி, மன்சூர் அலிகான், சதீஸ், விஜய் சேதுபதி போன்ற பல நடிகர்கள் நேரில் சென்று மயில்சாமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அதற்கு பிறகு மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் இறுதி ஊர்வலம் சாலிகிராமம் வெங்கடேஸ்வரா நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெற்றது. 

பின்னர் சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் மயானத்தில் பிரபல நகைச்சுவை நடிகரின் உடல் தகனம் செய்யப்பட்டது.இப்படி அஞ்சலி செலுத்தும் போதும் ஊர்வலத்தில் நடிகர் சூரி கலந்து கொண்டார். தொடக்கத்தில் இருந்தே ரசிகர்கள் இவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள முயற்சி செய்தார்கள். ஆனால் சூரி மறுத்து விட்டார்.


 ஆனால் செல்லும் வழியில் அவரது ரசிகர்கள் தொடர்ந்து வற்புறுத்தி புகைப்படத்தைக் எடுக்க கேட்டனர். இதனால் கலக்கமடைந்த சூரி “ புகைப்படம் கேட்க இது பொருத்தமான இடமா?” என்று கேட்டார்,ஆனாலும் தொடர்ந்து ரசிகர்கள் வற்புறுத்தியதால் அவர் கூட்டத்தை விட்டு விலகி விட்டார்.

இதனை தொடர்ந்து நடிகர்கள் நாசர் மற்றும் கார்த்தியின் ரசிகர்கள் சிலர் அவருடன் புகைப்படம் எடுக்கக் கோரிக்கை விடுத்தனர், ஆனால் அவர் தயவுசெய்து வேண்டாம் என்று கூறிவிட்டு சென்று விட்டார். இந்த வீடியோ வைரலாக நிலையில் மறைந்தவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நேரத்தில் கூட செல்பி எடுக்க முயற்சித்த அந்த ரசிகர்களை சோசியல் மீடியாவில் கடுமையாக வசைபாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement