• Sep 30 2023

மார்க் ஆண்டனி படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பைப் பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்- வைரலாகும் வீடியோ

stella / 2 weeks ago

Advertisement

Listen News!

'திரிஷா இல்லன்னா நயன்தாரா' படத்திற்கு பிறகு பெரிதான வெற்றியை கொடுக்காத ஆதிக் ரவிச்சந்திரனும், சமீப காலமாக ஒரு ஹிட்டுக்காக வெயிட் பண்ணிய விஷாலும் 'மார்க் ஆண்டனி' படத்தில் இணைந்தனர். இந்தப்படத்தின் டிரெய்லரே ரசிகர்கள் இடையில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பினை கிளப்பி இருந்தது. செம்ம கலர்புல்லாக, ஜாலியாக வெளியானது 'மார்க் ஆண்டனி' டிரெய்லர்.

இந்நிலையில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள 'மார்க் ஆண்டனி' படம் தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருகிறது. படம் ரசிகர்கள் இடையே வரவேற்பை பெற்று வரும் நிலையில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், இந்த சந்தோஷமான நிலையில் அஜித் சார் தான் என் நியாபகத்துல வர்றாரு. அவர் தான் என்னோட ஜானரையே மாத்தினார் என தெரிவித்துள்ளார். 


அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிசந்திரன் தெரிவித்துள்ள இந்த எமோஷனலான ஸ்டேட்மெண்ட் சோஷியல் மீடியாவில் கவனம் ஈர்த்து வருகிறது.'மார்க் ஆண்டனி' படம் விஷால், ஆதிக் ரவிச்சந்திரன் இருவருக்குமே கம்பேக் படமாக அமைந்துள்ளது. இரண்டு பேருமே இந்தப்படத்தால் சிறப்பான கம்பேக் கொடுத்துள்ளார். 

அத்துடன் எஸ்.ஜே. சூர்யா தனது வெறித்தனமான நடிப்பால் இந்தப்படத்தில் செம்மையாக ஸ்கோர் செய்துள்ளார். படம் பார்த்த ரசிகர்கள் பலரும் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பை பாராட்டி தள்ளி வருகின்றனர். இந்த நிலையில் எஸ்.ஜே சூர்யா படம் பார்த்த திரையரங்கில் படம் முடிந்ததும் ரசிகர்கள் கத்திக் கூச்சலிட்டு எஸ்.ஜே சூர்யாவை வாழ்த்தியுள்ளனர். 

இது குறித் வீடியோவை எஸ்.ஜே சூர்யா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement