பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சுஜிதா வெளியிட்ட வீடியோ-ஷாக்கான ரசிகர்கள்..!

1150

தமிழ்த் தொலைக்காட்சிகளில் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருப்பது விஜய்த் தொலைக்காட்சியாகும். இதில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் என்பன சூப்பர் ஹிட்டானவை. அந்த வகையில் எல்லா சீரியல்களிலும் தற்போது டாப் 3 இடத்தில் இருக்கும் சீரியலில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.

மேலும் சகோதர உறவை மையப்படுத்தி இந்த சீரியல் எடுக்கப்பட்டதால் இதற்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். இதில் தனம் எனும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர், பிரபல சின்னத்திரை நடிகை சுஜிதா.

இவர் சீரியல்களில் மட்டுமல்லாது வெள்ளித்திரையிலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவர் அஜித்தின் வாலி படம் உட்பட பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்துள்ளார்.

இதுவரை சின்னத்திரையில் சுஜிதா நடித்த பல கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளது. அந்த வரிசையில் தனம் கதாபாத்திரம் மக்கள் மனதில் இருந்து நீங்க இடத்தை பிடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிடும் நடிகை சுஜிதா தற்போது வயதான பாட்டி போல் வேடமிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இது நம்ம சுஜிதாவா இது என ஷாக் ஆகி உள்ளார்கள்.இதோ அந்த வீடியோ…