ஷூட்டிங்கின் போது நடிகை சைத்ரா ரெட்டிக்கு ஏற்பட்ட விபத்து-அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

641

சீரியல்களில் அறிமுகமாகி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை சைத்ரா ரெட்டி.இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் அறிமுகமாகி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்.

அதற்கு பின்னர் ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி தொடரில் வில்லியாக நடித்து தனது நடிப்பை மக்கள் மத்தியில் கொண்டு சென்றார்.

உனினும் தற்போது சைத்ரா ரெட்டி சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் கயல் என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கயல் தொடரின் ஷூட்டிங் போது அவருக்கு அடிபட்டதாகவும், அவரின் பைக்கில் இருந்து கீழே விழுந்ததாகவும் பதிவிட்டுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் என்ன நடந்தது? நீங்கள் விரைவில் குணமாகி வர வேண்டும் என்று எல்லாம் பதிவிட்டு வருகிறார்கள்.