இது ஷங்கர் மகளா வைரல் வீடியோவால் வியப்பில் ரசிகர்கள்

193

இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி சினிமாவிற்க்குள் அடி எடுத்து வைக்கிறார். இவர் நடிக்கவுள்ள படத்திற்க்கு ’விருமன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது .சூர்யாவின் 2டி நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் இயக்குனர் ஷங்கரின் மகள் சினிமாவிற்குள் அறிமுகமாகிறார்.

இப்படத்திற்க்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகவுள்ளது. யாரும் எதிர் பார்க்காத நேரத்தில் இயக்குநர் ஷங்கரின் மகள் சினிமாவிற்க்குள் அடியொடுத்து வைத்தது எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் நேற்றைய தினம் சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்து அவரிடம் ஆசீர்வாதம் பெற்றுச்சென்றுள்ளார் ஷங்கர் மகள் அதீதி.இந்நிலையில் இந்த படத்தின் மூலம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களிடம் சென்று சேர்ந்துவிட வேண்டும் என்பதால் படத்தில் தனக்கு மட்டும் சோலாவான் குத்துப்பாடல் ஒன்று வேண்டும் என இயக்குனரிடம் வேண்டுகோள் வைத்துள்ளாராம் இயக்குநர் ஷங்கரின் மகள் அதீதி .

இந்நிலையில் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் RC15 படத்தின் துவக்க விழாவில் மாடர்ன் உடையில் கலக்கலாக கலந்து கொண்டார் அதிதி. RC15 துவக்க விழாவுக்கு வந்த இயக்குநர் ராஜமவுலி, பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் ஆகியோருடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார் அதிதி . மேலும் விநாயகர் சதுர்த்தி அன்று போயஸ் கார்டனுக்கு சென்று சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் ஆசி வாங்கியிருக்கிறார்.