வலிமை படத்தால் மகிழ்ச்சியாக ரசிகர்கள் : அட இது தான் காரணமா !

1725


தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வரும் அஜித் திரையுலகில் தனக்கென்று ஓர் இடத்தை கொண்டுள்ளார். இவர் அதிக ரசிக பட்டாளத்தை தன்வசம் வைத்துள்ளார்.இவரை ரசிகர்கள் தல என அழைத்து வருகின்றனர். இவர் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.இவர் பல படஙடகளில் நடித்து வெற்றியும் பெற்றுள்ளார்.

இவர் கார்ரேஸ்சிலும் ஆர்வம் மிக்கவர் எனவும் கூறலாம்.இவர் காதல் கோட்டை என்ற படத்தின் மூலம் இவர் உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டார். இவர் அனைவருக்கம் ஒரு முன்மாதிரியாக திகழ்கின்றார். இந்த நிலையில் இவர் நேர்கொண்ட பார்வை என்ற படத்தை தொடர்ந்து உடனடியாக தொடங்கிய படம் வலிமை. இப்பட பூஜையின் போதே பட பெயரை அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்கள் ரசிகர்கள் என்றும் கூறலாம்.

மற்றும் உடனுக்குடன் படப்பிடிப்புகள் எல்லாம் வேகமாக நடந்து வந்தது, ஆனால் கொரோனா அவர்களின் வேகத்திற்கு பெரிய பிரேக் கொடுத்துவிட்டது. பின் மீண்டும் தொடங்கப்பட்ட படப்பிடிப்பு ஒரு வழியாக முடிந்து இப்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் உள்ளது என்றும் தயாரிப்பு குழுவும் படத்தை ரிலீஸ் செய்யும் வேலையில் பிஸியாக உள்ளார்கள் என்ற செய்தியும் வெளியாகி உள்ளன.

இதுவரை படத்தின் பஸ்ட் லுக், பஸ்ட் சிங்கிள் என வெளியாகியுள்ளது. அடுத்து என்ன ரிலீஸ் தான் என்ற வகையில் படக்குழு இதுவரை சரியான ரிலீஸ் திகதியை தெரிவிக்க வில்லை. இந்த நிலையில் தான் ஒரு தகவல், மதுரையில் உள்ள சில திரையரங்குகளில் படத்தை தாங்கள் இந்த பொங்கலுக்கு வெளியிடுகிறோம் என உறுதி செய்துள்ளனர்.

மதுரை திருமங்கலம் சந்தைப்பேட்டை ரிட்ஜி பாணு தியேட்டரில் இவரின் ‘வலிமை’ படத்தை திரையிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மதுரை அரசரடி எஸ்.எ.சி சோலமலை தியேட்டரும், அனுப்பானடி பழனி ஆறுமுகா, ராமநாதபுரம் நகரில் டி சினிமாஸ், ஜெகன் திரையரங்கமும் படத்தை திரையிடுவதாக அறிவித்துள்ளார்கள் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.