• Apr 20 2024

நடிகர் நானியைக் காண திரண்டு வந்த ரசிகர் கூட்டம்- தீயாய்ப் பரவி வரும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு உலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நானி. இவர் தமிழில் வெப்பம் என்கிற படத்தின் மூலமாக அறிமுகமானார். அதன் பின்னர் இவருக்கு திருப்புமுனையாக அமைந்த ஒரு படம் என்று சொன்னால் அது நான் ஈ தான். அதன் பின்னர் இவர் நீதானே என் பொன்வசந்தம் படத்திலும், நிமிர்ந்து நில் படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். 

தன் பின்னர் இவர் பெரிய அளவில் எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. தெலுங்கு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவர் தசரா என்கிற பான் இந்தியப்படத்தில் நடித்த முடித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் நேற்றைய தினம் வெளியாகி ரசிகர்களைக கவர்ந்திருந்தது.


வருகிற மார்ச் 30ஆம் தேதி இந்த திரைப்படம் உலகம் எங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ள தசரா படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்காக படக்குழுவினர் கலந்து கொண்டு வருகின்றனர். இப்படியான நிலையில் நானி தனது  ரசிகர்களை சந்தித்துள்ளார். இது குறித்த வீடியோ வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement