• Mar 28 2023

ஷூட்டிங்கில் திடீர் விபத்து.. எலும்பு உடைந்த நிலையில் சூப்பர் ஸ்டார்.. மூச்சு விடுவதில் சிரமம்.. வருந்தும் ரசிகர்கள்..!

Prema / 3 weeks ago

Advertisement

Listen News!

இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் அமிதாப்பச்சன். இவர் தற்போது புராஜெக்ட் கே என பெயரிடப்பட்ட படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இந்தப் படப்பிடிப்பானது ஐதராபாத் நகரில் நடத்தப்பட்டு வருகின்றது.


அதில் சமீபத்தில் சண்டை காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வந்தது. அப்போது, நடிகர் அமிதாப்புக்கு வலது இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு விலா எலும்பு உடைந்துள்ளது. அதுமட்டுமல்லாது தசை பகுதியும் வெகுவாகப் பாதிப்படைந்து உள்ளது. இதனால், படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு அவர் உடனடியாக ஐதராபாத் நகரில் உள்ள ஏ.ஐ.ஜி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 


அங்கு அவருக்கு டாக்டர்கள் சி.டி. ஸ்கேன் செய்து உள்ளனர். இதனையடுத்து அவர் சில நாட்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கி உள்ளனர். இதனால் அவர் தற்போது தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். வீட்டிலேயே இருந்தபடி ஓய்வு எடுத்து வருகிறார். 


இது குறித்த விபரங்களை அமிதாப்பச்சன் தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டு உள்ளார். அதாவது அவருக்கு மூச்சு விடும்போதும், நடந்து செல்லும்போதும் வலி ஏற்படுகிறது என தெரிவித்து உள்ளார். இதனால், இயல்பு நிலைக்கு திரும்ப சில வாரங்கள் ஆகலாம். வலிக்கான மருந்துகளை எடுத்து வருகிறேன் என்றும் அவர் கூறி உள்ளார். 


இவ்வாறு அமிதாப்பச்சன் பலத்த காயங்களுக்கு உள்ளாகி இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவருக்கு தமது வருத்தத்தினை கமெண்டுகளின் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து ரசிகர்கள் யாரும் தன்னை பார்க்க வரவேண்டாம் என்று அவர்களிடம் கேட்டு கொண்டுள்ளார் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன்.

Advertisement

Advertisement

Advertisement