• Dec 05 2022

அவதார் 2 படத்தின் டிக்கெட் விலையைக் கேட்டு தலைசுற்றும் ரசிகர்கள் - புலம்பும் நெட்டிசன்கள்

Listen News!
Aishu / 1 week ago
image
Listen News!

இந்தியாவில் அவதார் 2 படத்துக்கான டிக்கெட் முன்பதிவு  ஆரம்பமாகியுள்ள  நிலையில், அப்படத்தின் டிக்கெட் விலை அறிந்து நெட்டிசன்கள் ஷாக் ஆகி பதிவுகளை போட்டுவெருகிறார்கள்.

உலகளவில் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையை படைத்த திரைப்படம் அவதார். மேலும் இப்படம் ரிலீசாகி 13 ஆண்டுகள் ஆகும் நிலையில், இன்னும் இந்த சாதனை முறியடிக்கப்படவில்லை. ஆது்துர்ட  3 ஆஸ்கர் விருதுகளை வென்ற இப்படம் உலகளவில் 2.85 பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து இருந்தது. டைட்டானிக் படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தான் இப்படத்தை இயக்கி இருந்தார்.

மேலும் அவதார் படத்தின் சாதனையை முறியடிக்க சுமார் 13 ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின் தயாராகி உள்ள படம் தான் அவதார் 2. அவதார் தி வே ஆஃப் வாட்டர் என பெயரிடப்பட்டுள்ள இப்படம் வருகிற டிசம்பர் 16-ந் தேதி உலகமெங்கும்  பிரமாண்டமாக ரிலீசாக உள்ளது. முதல்பாகம் பிரம்மாண்ட வெற்றி பெற்றதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

ஆங்கிலத்தில் தயாராகிள்ள அவதார் 2 திரைப்படம், இந்தியாவில் உள்ள தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட உள்ளது. அத்தோடு  அவதார் 2 படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சியுள்ள நிலையில், அப்படத்தின் முன்பதிவு இன்று ஆரம்பமாகி உள்ளது.

இந்தியாவிலும் இப்படத்திற்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.எனினும்  அ ஐமேக்ஸில் இப்படத்தின் டிக்கெட் விலை ரூ.1000 முதல் ரூ.1500 வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப் போய் உள்ளனர். இதைப் பார்த்த ரசிகர்கள் இதென்னப்பா பகல் கொள்ளையா இருக்கே என புலம்பி வருகின்றனர்.