• Apr 16 2024

லவ்டுடே பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதனை இடுப்பில் தூக்கி வைத்து கொண்டாடிய ரசிகர்கள்- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

கோமாளி படத்தின் வெற்றிக்கு பின்னர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ரிலீசாகி உள்ள திரைப்படம் லவ் டுடே. இப்படத்தின் மூலம் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாகவும் அறிமுகமாகி உள்ளார்.

கோலிவுட்டில் தற்போது திரும்பிய பக்கமெல்லாம் லவ் டுடே படத்தின் வெற்றியைப் பற்றிய பேச்சு தான். அந்த அளவுக்கு திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை  இப்படம் ஏற்படுத்தி உள்ளது.இந்த படத்தில் நிறைய புதுமுகங்கள் தான் நடித்திருந்தனர்.


வெறும் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஏஜிஎஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட லவ் டுடே திரைப்படம் தற்போது பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி வருகிறது. இப்படம் தற்போது வரை தமிழ்நாட்டில் மட்டும் ரூ.55 கோடி வசூலித்து உள்ளது. 


இந்த நிலையில் பிரதீப் தற்போது தன் லவ் டுடே படத்தை தெலுங்கில்டீ டப் செய்து ரிலீஸ் செய்துள்ளார்.இப்படம் இன்று தெலுங்கிலும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. அதிலும் ஒரு ரசிகர் படம் பார்த்து விட்டு ஆர்வ மிகுதியில் பிரதீப்பை இடுப்பில் தூக்கி வாழ்த்தியுள்ளார்,இது குறித்த வீடியோ வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement