• Sep 27 2022

இளமைக்குத் திரும்பிய தம்பி ராமையா.... புகைப்படத்தைப் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

Listen News!
Prema / 3 days ago
image
Listen News!

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர் என்ற இரு முகங்களைக் கொண்டு விளங்கி வருகின்ற ஒருவரே தம்பி ராமையா. அந்தவகையில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வரும் இவர் முரளி நடித்த ‘மனுநீதி’, வடிவேலு நடித்த ‘இந்திரலோகத்தில் நா அழகப்பன்’, தனது மகன் உமாபதி நடித்த ‘மணியார் குடும்பம்’ ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார்.


அதுமட்டுமல்லாது இவர் 'கும்கி, கழுகு, தலைவா' ஆகிய திரைப்படங்களில் சிறப்பாக தன்னுடைய நடிப்பினை வெளிப்படுத்தி இருக்கின்றார். இவர் தனது ஆரம்பகால கட்டத்தில் பல திரைப்படங்களில் நடித்து வந்திருந்தாலும் 'மைனா' திரைப்படம் தான் தம்பி ராமையாவிற்கு சினிமாவில் சிறந்ததொரு அடையாளத்தை பெற்றுக் கொடுத்தது.


மேலும் இவர் தற்போது பாடலாசிரியராகவும் பணியாற்றுகின்றார். எத்தனை வயதானாலும் சினிமாத் துறையை விட்டு விலக விரும்பாத இவர் நடிப்பில் சமீபத்தில் 'விக்ரம், லெஜண்ட்' போன்ற படங்கள் வெளிவந்திருந்தன.


இந்நிலையில் தற்போது நடிகர் தம்பி ராமையாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. அதாவது அப்புகைப்படத்தில் இளம் நடிகரை போல் மாறி தனது லேட்டஸ்ட் லுக்கில் தம்பி ராமையா தோற்றமளிக்கின்றார். 


இதனைப் பார்த்த ரசிகர்கள் அப்புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்

TAGS
Thank you for voting! 0 votes
0%
0%
0%
0%
0%
0%