• Apr 20 2024

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி தளத்தில் வெளியாகப்போகும் திரைப்படங்கள்... ரசிகர்கள் மகிழ்ச்சியில்...

ammu / 1 year ago

Advertisement

Listen News!

மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் தமிழ் திரைப்படங்கள் மார்ச் முதல் வாரத்தில் வெளியாக உள்ளது. அந்த வகையில் தியேட்டரில் மட்டுமல்லாமல் OTT தளத்திலும் படங்கள் வெளியாக உள்ளது. 


அந்த வகையில் மார்ச் முதல் வாரத்தில் பஹீரா, பல்லுபடாம பாத்துக்கோ, அரியவன், அயோத்தி, இன்கார் ஆகிய 5 திரைப்படங்கள் தியேட்டரில் ரிலீசாக உள்ளன. இந்த படங்களுக்காக காத்துக்கொண்டு இருக்கும் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


பஹீரா திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் பிரபுதேவா நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் அமைரா தஸ்தூர், சஞ்சிதா ஷெட்டி, ஜனனி, சாக்‌ஷி அகர்வால், காயத்ரி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படம் மார்ச் 3-ந் தேதி ரிலீசாக உள்ளது.


அரியவன் படத்தை மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கியுள்ளார். இதில் புது முகங்களான  இஷான், பிரனாலி நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜேம்ஸ் வஸந்தன், வேத் ஷங்கர் மற்றும் கிரிநாத் ஆகியோர் இசையமைத்து உள்ளனர். இதுவும் மார்ச் 3 ல் வெளியாக உள்ளது.


நடிகர் சசிகுமார் நடித்துள்ள அயோத்தி திரைப்படத்தை மந்திர மூர்த்தி இயக்கியுள்ளார். இது ஒரு உண்மைக்கதையை மையமாக கொண்டு அமைந்துள்ளது. இந்த படமும் மார்ச் 3ல் தான் வெளியாக உள்ளது.


விஜய் வரதராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள பல்லுபடாம பாத்துக்கோ படத்தில் அட்டக்கத்தி தினேஷ் நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளார். இந்த படமும் மார்ச் 3 ல் தான் ரிலீஸ் ஆக உள்ளது.


நடிகை ரித்திகா நடித்துள்ள இன் கார் படமும் மார்ச் 3ல் வெளியாக உள்ளது. இது ஒரு பான் இந்தியா படமாக உள்ளது.


அதேபோல, இந்த வாரம் 2 படங்கள் OTT யில் வெளியாக இருக்கிறது. அதில் ஒரு படம் தி கிரேட் இண்டியன் கிச்சன். ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள இப்படத்தை கண்ணன் இயக்கி உள்ளார். இது மலையாள படத்தின் ரீமேக் ஆகும். இப்படம் வருகிற மார்ச் 3-ந் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது.


ஓடிடியில் ரிலீசாகும் மற்றொரு தமிழ் படம் தலைக்கூத்தல். சமுத்திரக்கனி, கதிர் ஆகியோர் நடிப்பில் ரிலீசாகி விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்ற இப்படம் மார்ச் 3-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது.


Advertisement

Advertisement

Advertisement