• Mar 27 2023

''விஜய் Sir-க்கு ரசிகர்கள் தான் எல்லாமே''....லோகேஷ் கனகராஜ் கொடுத்த வேறலெவல் பேட்டி!

Jo / 1 week ago

Advertisement

Listen News!

மிகப் பெரிய வசூல் வேட்டையை நடத்திய விக்ரம் திரைப்படத்திற்குப் பிறகு, தற்போது லியோ படத்தை இயக்கிவருகிறார் லோகேஷ் கனகராஜ். இதுவரை நான்கு படங்களே வெளியாகியிருக்கும் நிலையில், தமிழின் மிக முக்கியமான இயக்குநர் என அவர் கருதப்படுவதற்கு, அவர் படங்கள் வசூல் சாதனை படைப்பது மட்டும் காரணமல்ல.

மாறாக, லோகேஷின் படங்கள் திரையரங்கிற்கு வரும் ரசிகர்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றன. ஓடிடிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துவிட்ட இந்த காலகட்டத்திலும் திரையரங்களைத் தேடிவரும் ரசிகர்களை அவர் ஏமாற்றுவதில்லை. திரையரங்கில் பார்த்தால் மட்டுமே கிடைக்கக்கூடிய சிறப்பான அனுபவத்தை இவரது படங்கள் வழங்குகின்றன.

இந்நிலையில் சேனல் ஒன்றுக்கு பல சுவாரிஸ்யமான தகவல்களை பகிர்ந்திருந்தார். அந்தவகையில்  'விஜய் சாருடன் ரசிகர்கள் பத்தி பேசி இருக்கிறீங்களா ?என்ற கேள்விக்கு ''படத்துல ,ஆடின்ஸ் லாஞ்ல  ரசிகர்கள் மேல ம் மட்டும் கை வைக்காதீங்க என்னு சொல்லுவாரு.இத ஒரு பேச்சுக்காக சொல்ல மாட்டாரு ,அந்தளவுக்கு ரசிகர்கள் மேல கோணேஸ்ட்டா நடந்திப்பாரு.கொவிட் டைம்ல யார் யார் கஸ்டப்பட்டங்களோ ,அவங்களுக்கெல்லாம் உதவி பண்ணியிருக்காரு.அது போக கோம்லி ஒன்னுல அங்க இருக்கிற குழந்தைகளுக்கு சாப்பாடு போட்டு எல்லாமே பண்ணாரு.அவர் அவருடைய பான்ஸ்க்கு ஒதுக்கி பண்ணுற விஷயம் நிறைய இருக்கு.அவருக்கு பான்ஸ் தான் எல்லாமே''..என கூறினார்.

மேலும்,விஜய் சார் உங்களுக்கு கொடுத்த மிகப்பெரிய கிப்ட்னா நீங்க எத சொல்லுவீங்க ''அவர் கொடுத்த கிப்ட் என்னனென்னா ஸ்பேஸ் தான்.பட ஷூட்டிங்ல என்ன பண்ணாலும் உன் இஷ்டப்படி பண்ணிக்கோன்னு விட்டுடுவாரு.அத அவர் தந்த மிகப்பெரிய கிப்ட்ன்னே சொல்லலாம்.என தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement