• Apr 01 2023

என்னது 'லியோ' படத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கின்றாரா..? வெளியான வீடியோவால் குழப்பத்தில் ரசிகர்கள்..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தற்போது 'லியோ' படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் இணைந்து பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், இயக்குநர்கள் மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், நடிகர்கள் அர்ஜுன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், நடிகை பிரியா ஆனந்த் என பெரும் பட்டாளமே நடித்து வருகின்றனர்.


இப்படத்தின் உடைய படப்பிடிப்பு ஆனது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் காஷ்மீரில் கடுமையான குளிரும் பனிப்பொழிவும் நிலவி வரும் நிலையில் கதைக்கு ஏற்ற சூழல் இதுதான் என்பதால் விடாப்பிடியாக படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர் படக்குழுவினர்.


மேலும் அவ்வப்போது காஷ்மீரில் இருந்து படக்குழுவினர் வெளியிடும் போட்டோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் தற்போது லெஜண்ட் சரவணன் ஷேர் செய்துள்ள போட்டோவையும் வீடியோவையும் பார்த்த நெட்டிசன்கள் பலரும் ஷாக்காகியுள்ளனர். 


ஏனெனில் லெஜண்ட் சரவணா ஸ்டோர் உரிமையாளரான லெஜண்ட் சரவணன், தற்போது காஷ்மீரில் தான் உள்ளார். அதாவது காஷ்மீரில் லக்ஸுரியஸ் ஹோட்டலில் தங்கியுள்ள அவர், ஹோட்டல் அறையை சுற்றியும் ஜன்னல் வழியாக காஷ்மீரின் பனிப்படர்ந்த அழகையும் வீடியோ எடுத்துள்ளார். 

அந்த வீடியோவை தனது சோஷியல் மீடியா பக்கத்திலும் ஷேர் செய்துள்ளார் லெஜண்ட் சரவணன். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் லெஜண்ட் சரவணன், விஜய்யின் லியோ படத்தில் இணைந்துள்ளார் என ஒரு வதந்தியினைப் பரப்பி வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement