• Apr 20 2024

லியோ படத்தில் பிரபல யூடியூபர் இர்பானும் நடிக்கின்றாரா?- இது என்ன புது சஸ்பென்ஸாக இருக்கே?

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் நடிக்கும் லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். லியோ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்திய படக்குழு, அடுத்தகட்டமாக தற்போது காஷ்மீரில் ஷூட்டிங்கை நடத்தி வருகிறது. 

இதற்காக கடந்த 2 மாதங்களாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அங்கு தங்கி படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். இதனிடையே நேற்று இரவு காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் லியோ படக்குழு என்னாச்சோ, ஏதாச்சோனு பதறிப்போய் ரசிகர்கள் டுவிட்டரில் கேள்வி எழுப்ப, நாங்க பத்திரமா இருக்கோம் நண்பா என டுவிட்டை தட்டிவிட்டு தாறுமாறு செய்தது லியோ தயாரிப்பு நிறுவனம்.


நிலநடுக்கம் வந்தாலும் பரவாயில்லை என இன்று மீண்டும் ஷூட்டிங்கிற்கு கிளம்பிவிட்டார் லோகேஷ் கனகராஜ். அவரை லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்த பிரபல யூடியூபர் இர்பான் அவருடன் எடுத்த செல்பி புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் லியோ படத்தில் நடிக்க சென்றாரா அல்லது காஷ்மீரை சுற்றிப்பார்க்க சென்றாரா என்பது இன்னும் உறுதியாக தெரியாத நிலையில், படத்தில் அவரது கேரக்டர் என்னவாக இருக்கும் என்பது வரை நெட்டிசன்கள் யூகிக்க தொடங்கி உள்ளனர்.


அதன்படி லியோ படத்தில் நடிகர் விஜய் நடத்தி வரும் பேக்கரியில் இர்பான் ரிவ்யூ செய்ய செல்வார் என்றும், அப்போது அங்கு அவர் எடுத்த வீடியோவை யூடியூப்பில் பார்த்த எதிரிகள் அவரை தேடி வந்து பழிவாங்குவர் என்றும், படத்தில் முக்கியமான டுவிஸ்ட் வைக்க போறதே இர்பான் தான் என்றும் அடுக்கடுக்கான கட்டுக்கதைகளை நெட்டிசன்கள் அள்ளிவீசி வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement