கைக்குழந்தை மகளுடன் போட்டோ ஷூட் நடத்திய பிரபல விஜய்டிவியின் சீரியல் நடிகை

528

தமிழ்த் தொலைக்காட்சிகளில் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருப்பது விஜய்த் தொலைக்காட்சியாகும்.இதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எல்லாம் மக்களைக் கவர்ந்தவையாகவே உள்ளன. மேலும் இதில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபல்யமடைந்துள்ளன என்பதும் முக்கியமாகும்.

அத்தோடு விஜய் டிவியில் தற்பொழுது புதுப்புது சீரியல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் இதில் சூப்பர் ஹிட்டாக ஓடி முடிந்த சீரியல் தான் ராஜா ராணி. இந் சீரியலில் நடித்து பிரபல்யமானவர் தான் நடிகை ஸ்ரீதேவி. இவர் கடந்த 2007ஆம் ஆண்டு சன் டிவி-ல் ஒளிபரப்பான செல்லமடி நீ எனக்கு சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர்.

மேலும் இவர் அந்த தொடர்களை தொடர்ந்து வாணி ராணி, தங்கம், கல்யாண பரிசு, செம்பருத்தி, ராஜா ராணி உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமானார்.மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புகைப்படக் கலைஞர் அசோக் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரீதேவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் தற்போது நடிகை ஸ்ரீதேவி அவரின் கைக்குழந்தை மகளுடன் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படங்களே தற்பொழுது வைரலாகி வருவதுாடு பலரும் பாராட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.