• Mar 28 2024

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஒளிபரப்பு செய்யவுள்ள பிரபல தொலைக்காட்சி- அதுவும் எப்போது தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.இந்த இசை வெளியீட்டு விழாவில் முக்கிய பிரபலங்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

குறிப்பாக சரத்குமார் எஸ்.ஜே சூர்யா வாரிசு பட இயக்குநர் வம்சி தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் விஜய் ராஷ்மிகா மந்தனா விஜய்யின் பெற்றோர் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. நேரு ஸ்டேடியத்திற்குள் நுழைய முயன்ற விஜய் ரசிகர்களை போலீஸார் விரட்டியடித்து கேட்டை இழுத்துப் பூட்டியுள்ள வீடியோ ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.


நடிகர் விஜய் வெள்ளை சட்டை அணிந்து கொண்டு வாரிசு இசை வெளியீட்டு விழாவுக்கு சற்று முன் வருகை தந்த நிலையில், ஒட்டுமொத்த அரங்கமே அதிரும் அளவுக்கு விஜய் ரசிகர்கள் தளபதி விஜய் என்றும் தீ தளபதி என்றும் கோஷமிட்டு நடிகர் விஜய்யை வரவேற்றனர்.


இப்படியொரு நிலையில் வாரிசு படத்தின் இசைவெளியீட்டு விழாவை வரும் புதுவருடத்தில் மாலை 6.30 மணிக்கு சன்டிவி ஒளிபரப்பு செய்யவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement