Monday, August 8, 2022

பில்கேட்ஸை சந்தித்த பிரபல சூப்பர் ஸ்டார் நடிகர்- வைரலாகும் போட்டோ

தெலுங்கு சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தை உருவாக்கிய நடிகர்களில் ஒருவர் நடிகர் மகேஷ் பாபு. இவரது நடிப்பிற்கு என்றே சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் சினிமாவிற்கு விஜய் போன்று தெலுங்கு சினிமாவிற்கு மகேஷ்பாபு எனப் புகழ்ந்து பேசுவார்கள். ஏனெனில் விஜய் நடித்து வெற்றி பெற்ற ‘கில்லி, போக்கிரி’ போன்ற படங்கள் தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த படங்களினுடைய ரீமேக்குகள் தான்.

இந்த நிலையில் 2000 ஆம் ஆண்டு நடிகை நர்மதாவுடன் இணைந்து ‘வம்சி’ என்ற தெலுங்கு படத்தில் நடித்த போது இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டு 2005-ஆம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டனர். தெலுங்கு ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜோடியான இவர்கள் இருவருக்கும் கெளதம் என்ற மகனும், சித்தாரா என்ற மகளும் உள்ளனர்.

குடும்ப வாழ்க்கையில் இணைந்திருந்தாலும் கணவன், மனைவி இருவருமே எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர்கள். இந்த நிலையில் தற்போது நடிகர் மகேஷ் பாபு பகிர்ந்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் செம வைரலாகி வருகின்றது. அதாவது உலகப் பணக்காரர்களின் பட்டியலில் முன்னிலையில் இருப்பவரும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அதிபருமான பில்கேட்ஸ் உடன் இணைந்து இவர் எடுத்த போட்டோவே தற்போது வெளியாகி உள்ளது.

மேலும் பில்கேட்ஸை சந்தித்துள்ள அவர் தனது டுவிட்டரில் “பில்கேட்ஸை சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. உலகம் இதுவரை கண்ட தொலைநோக்கு சிந்தனையாளர்களில் ஒருவர் பில்கேட்ஸ், மிகவும் தன்மையானவர், உத்வேகம் அளிக்கும் மனிதர்” எனவும் பதிவிட்டுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்