காதலனின் பெயரை பச்சை குத்திய பிரபல ஷு தமிழ் சீரியல் நடிகை – குவியும் வாழ்த்துக்கள்

1004

தமிழ் சின்னத்திரையில் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருப்பது ஷு தமிழ் ஆகும். இதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் என்பன ரசிகர்களைக் கவர்ந்தவையாகவே உள்ளன. அந்த வகையில் இதில் சூப்பர் ஹிட்டாக ஓடி முடிந்த சீரியல் தான் பூவே பூச்சூடவா.

மேலும் இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபல்யமானவர் தான் நடிகை ரேஷ்மா. இவர் இந்த சீரியலில் நடிக்க முதல் ஷு தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் என்னும் நிகழ்ச்சியில் நடனமாடியதன் மூலம் ரசிகர்களிடையே அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்தே சீரியலில் கமிட்டாகியவர்

மேலும் ரேஷ்மா தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அபி டைலர் என்ற தொடரில் நடித்து வருகிறார்.அதே தொடரில் அவருக்கு ஜோடியாக நடித்து வரும் மதனை ரேஷ்மா காதலித்து வருகிறார். மேலும் அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் அறிவித்து இருந்தனர்.

இந்நிலையில் தற்போது ரேஷ்மா அவரின் காதலர் மதனின் பெயரை தனது கழுத்தின் பின்னால் பச்சை குத்தி கொண்டுள்ளார்.அதனை ரேஷ்மா அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.