கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்குள் அனுமதிக்கப்பட்ட பிரபல தயாரிப்பாளர்.

291

கடந்த சில மாதங்களாக கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்துச் செல்கின்றது. இதனால் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கானோர் பாதிப்படைந்து வருவதோடு பலரும் உயிரிழக்கின்றனர் பலர் அதிலிருந்து குணமாகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

அத்தோடு இந்தக் கொரோனாத் தொற்றில் இருந்து விடுபடுவதற்காக இந்திய அரசாங்கமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அத்தோடு பலரும் நிதியுதவியும் புரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை பிரபல பாடலாசிரியர் மற்றும் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் அவர்களின் மனைவி கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தது திரையுலகினருக்கு பேரதிர்ச்சிக்குட்படுத்தியது. இந்த நிலையில் சற்று முன் இன்னொரு பிரபலமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

பிரபல தயாரிப்பு நிறுவனமான அம்மா கிரியேஷன்ஸ் வெங்கட் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார் என்று அம்மா கிரியேஷன்ஸ் சிவா அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:எனது 36 வருட நண்பன் அம்மா கிரியேஷன்ஸ் வெங்கட் கொரோனவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். அவர் மீண்டு வர அனைவரும் பிராத்திக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று பதிவு செய்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: