தனது 52 வயதில் பிரிந்த காதலனுடன் இணைந்த பிரபல பாப் பாடகி

163

பிரபல பாப் பாடகியும், அமெரிக்க நடிகையுமான ஜெனிபர் லோபஸ் அவருடைய 52வது பிறந்தநாளை பிரிந்த கணவருடன் கொண்டாடியிருக்கிறார்.
மூன்று முறை திருமணம் செய்து விவாகாரத்து, சில பல ஆண் நண்பர்களுடனான வாழ்க்கை என பிரபல பாப் பாடகியும், அமெரிக்க நடிகையுமான ஜெனிபர் லோபஸ்ன்ஸின் தனி ப்பட்ட வாழ்க்கையில் காதலும், திருமணமும் பிரிவும் கலந்திருக்கிறது.

தன்னுடைய பிறந்தநாளை பிரான்ஸ் நாட்டின் கடற்பகுதியில் ஒரு படகில் கொண்டாடியிருக்கிறார். 2002ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை தான் காதலித்த பென் அப்லெக் என்பவருடன் மீண்டும் தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்துள்ளார் ஜெனிபர். கடந்த ஏப்ரல் மாதமே மீண்டும் இவர்கள் இணைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்தன. அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனது பிறந்தநாளில் வெளியிட்டுள்ளார் ஜெனிபர்.

2008ம் ஆண்டில் தனது மூன்றாவது கணவர் மார்க் ஆண்டனி மூலம் ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டைக் குழந்தைகளுக்கு தாயானவர் . அந்தக் குழந்தைகளின் புகைப்படங்களை முதன் முதலில் தங்களது பத்திரிகையில் வெளியிட ‘பீப்புள்’ 6 மில்லியன் யுஎஸ் டாலர் கொடுத்தது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.

தனது 52வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மஞ்சள் நிற பிகினி அணிந்து ஜெனிபர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை அள்ளியுள்ளன.