• Sep 21 2023

விபத்தில் சிக்கி.. பிரபல இசையமைப்பாளர் சம்பவ இடத்திலேயே மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Prema / 2 weeks ago

Advertisement

Listen News!

திரையுலகை பொறுத்தவரையில் சமீபகாலமாக பல தொடர் உயிரிழப்புக்கள் இடம்பெற்ற வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் தற்போது பிரபல இசையமைப்பாளர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

அந்தவகையில் மலையாளத் திரைப்படங்களின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தசி. இதனையடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஒரியா, வங்காளம், ஆங்கிலம் எனப் பல மொழிப் படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.


திரைப்படங்களுக்கு மட்டுமல்லாது ஒரு சில சீரியல்களுக்கும் இவர் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இவர் தன்னுடைய நண்பர்களுடன் ரியல் எஸ்டேட் வியாபாரம் தொடர்பாக கேரள மாநிலத்திற்கு சென்று மீண்டும் சென்னைக்கு திரும்புகையில் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இவர் மட்டுமல்லாது இவருடைய நண்பர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். அந்தவகையில் இவர்கள் வந்த கார் திருப்பூர் மாவட்டம் அவினாசி, பழக்கரை பைபாஸ் பகுதியில்  வந்து கொண்டிருந்த சமயத்தில் முன்பக்க டயர் திடீரென வெடித்தது.


இதனையடுத்து கார் அருகே இருந்த தடுப்பு சுவர் ஒன்றின் மீது பலமாக மோதியது. இதனைத் தொடர்ந்து காரின் முன்பக்கத்தில் இருந்த இசையமைப்பாளர் தசி மற்றும் அவருடைய நண்பர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இவரின் திடீர் உயிரிழப்பிற்குப் பலரும் தங்களது இரங்கலினைத் தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement