10 வருட காதலனைப் பிரியும் பிரபல சின்னத்திரை நடிகை- இவர் இப்போ திரைப்படங்களிலும் நடிக்கின்றவராச்சே

61560

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் பலர் இருக்கின்றனர். இவர்களில் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பின்பு சின்னத்திரையில் சீரியல்கள் நடித்ததன் மூலம் பிரபல்யமானவர் தான் நடிகை ப்ரியா பவானி சங்கர். இவர் விஜய்டிவியில் நெஞ்சம் மறப்பதில்லை என்னும் சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர் மனதில் இடம் பிடித்தவர்.

மேலும் ஒரு காலத்தில் சின்னத்திரை நடிகைகள் சினிமாவுக்குள் நுழைவது கடினமாக இருந்த நிலையில் அதை பொய்யாக்கும் விதமாக சினிமாவிலும் நுழைந்து வெற்றிகரமான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது குருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே மற்றும் அருண் விஜய் படம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இவர் செய்தி வாசிப்பாளராக இருந்த காலத்தில் இருந்தே மென்பொருள் பொறியாளர் ஒருவரை காதலித்து வந்தார். அவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனக்கு உறுதுணையாக இருப்பவர் தனது காதலர் என்று பெருமையாக பேசிவந்தார் ப்ரியா.

ஆனால் இப்போது அவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக இணையத்தில் தகவல்கள் பரவ ஆரம்பித்துள்ளன. இதுபற்றிய உண்மையான தகவல் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.