யோகிபாபுவின் வீட்டிற்கு தனது கணவருடன் சென்ற பிரபல பெண் நடன இயக்குனர்- இவர் டிவி ஷோக்களிலும் வருகிறவராச்சே

195

தமிழ் சினிமாவில் தமது தனித்திறமையான நகைச்சுவை நடிப்பினால் முன்னேறிய பல நகைச்சுவை சடிகர்களில் முக்கியமானவர் தான் நடிகர் யோகிபாபு. இவர் தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் காமெடியனாக நடித்து வருவது தெரிந்ததே. மேலும் இளம் ரசிகர்களைக் கவர்ந்த இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

மேலும் தற்பொழுது பல படங்களில் கதாநாயகனாகவும் கமிட்டாகி நடித்து வருகின்றார். அத்தோடு இவர் ஆரம்பத்தில் இயக்குநர் அமீர் ஹீரோவாக நடித்த யோகி படத்தில் நடித்தவர் பாபு. இப்படத்தைத் தொடர்ந்தே யோகி பாபு என அழைப்பட்டு வருனிக்றார்.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகான யோகிபாபு, நடிகர் அஜித்தின் வலிமை மற்றும் விஜய் 65 உள்ளிட்ட பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான அவரின் மண்டேலா திரைப்படமும் சூப்பர் வெற்றி பெற்றது.

அத்தோடு சந்தானம் நடிப்பில் வெளியான டிக்கிலோனா திரைப்படத்திலும் காமெடியனாக நடித்திருந்தார். இந்நிலையில் நடன கலைஞர் கலா மாஸ்டர் அவரது கணவருடன் யோகி பாபுவின் வீட்டிற்கு விருந்தாளியாக சென்று எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை கண்ட நெட்டிசன்ஸ் அட இவர் தான் கலா மாஸ்டர் புருஷனா… இம்புட்டு நாளா தெரியாம போச்சே… என கமெண்ட் செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.