• Apr 20 2024

'லால் சலாம்' படத்தில் இணைந்த பிரபல நகைச்சுவை நடிகர்.. அடடே இவரா..? இப்பவே சிரிப்பு அடக்க முடியலயே..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தற்போது 'லால் சலாம்' என்ற திரைப்படம் உருவாகி வருகின்றது. பல வருடங்களுக்கு பின் ஐஸ்வர்யா இயக்கத்தில் இப்படம் வெளியாக இருப்பதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றது.


மேலும் இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதோடு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தும் கேமியோ ரோல் ஒன்றில் நடிக்கிறார். அந்தவகையில் இப்படத்திற்காக 7 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் ரஜினிகாந்த்.


இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆனது தற்போது செஞ்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த நேரத்தில் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதாவது இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நகைச்சுவை நடிகர் செந்தில் நடித்து வருவதாக கூறப்படுகின்றது.


அதுமட்டுமில்லாமல் செஞ்சியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் விஷ்ணு விஷால் மற்றும் செந்திலுக்குமான காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி சமூக வலைத்தளங்களில் தீயாய்ப் பரவி வருகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement