• Jun 04 2023

பாரதி கண்ணம்மா சீரியலில் இணைந்த பிரபல நடிகை- அடடே இவர் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் வருபவராச்சே

stella / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா சீசன் 2. வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் சிப்பு சூர்யன் மற்றும் வினுஜா தேவி ஆகியோர் லீட் ரோலில் நடித்து வருகின்றனர்.

பாரதிக்கு கண்ணம்மா மீது காதல் வந்து விட்டது. இதனை கண்ணம்மாவிடமும் வெளிப்படுத்தி விட்டார். எனவே கண்ணம்மா பாரதியின் காதலை ஏற்றுக் கொள்வாரா இல்லையா என்பதை வரும் எப்பிஷோட்டுகளில் தான் தெரிய வரும்.


இப்படியான நிலையில் இந்த சீரியலில் கெஸ்ட் ரோலில் நடிக்க சாரா லயா கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சாரா லா இதற்கு முதல் பாரதி கண்ணம்மா சீசன் 1 இலும் போலீஸாக கெஸ்ட் ரோலில் நடித்தவர் ஆவார்.

இது தவிர லயா ஷீ தமிழில் ஒளிபரப்பாகும் மீனாட்சி பொண்ணுங்க என்னும் சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement