• Dec 07 2022

சிகிச்சை பலனின்றி பிரபல நடிகையும் பாடகியுமான ஒருவர் மரணம்- இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்

Listen News!
stella / 4 weeks ago
image
Listen News!


மலையாள திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர்  தான் நடிகை கொச்சின் அம்மினி. 12 வயதில் இருந்து நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்து இருக்கிறார். 

இது தவிர பல பாடல்களையும் பாடிய இவர் கண்டம் பச்ச கொட்டட்டு, தூக்குகல் கதா பரயன்னு, உன்னியர்சா, அடிமகல் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்.மேலும் நடிகைகளுக்கு பின்னணி குரலும் கொடுத்துள்ளார். 


சாரதா, கே.ஆர்.விஜயா, பி.எஸ்.சரோஜா, விஜயநிர்மலா, உஷாகுமாரி உள்ளிட்ட பலருக்கு பின்னணி குரல் கொடுத்ததால் விருதுகள் பல பெற்றுள்ளார்.இந்த நிலையில் அண்மையில் இவருக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நல குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து கொல்லத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலன் இன்றி கொச்சின் அம்மினி மரணம் அடைந்தார். இவருக்கு பலரும் தமது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.