ரஜினிகாந் பங்குபற்றிய “மேன் வெர்சஸ் வைல்ட்” நிகழ்ச்சியில் பங்குபற்றவுள்ள பிரபல நடிகர்

101

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந். இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்பொழுதும் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். அந்த வகையில் இவர் நடிப்பில் தற்பொழுது அண்ணாத்த என்னும் படம் உருவாகி வருகின்றது என்பதும் தெரிந்ததே.

மேலும் ரஜினிகாந் கடந்த சில ஆண்டுகளுக்கு முதல் டிஸ்கவரி தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகும் ‘மேன் வெர்சஸ் வைல்ட் என் நிகழ்ச்சியில் பங்குகொண்டார். அந்த வகையில் இவர் வனப்பகுதிகளுக்குச் சென்றதோடு அங்கு கிரில்ஸுடன் நடந்த பல்வேறு அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார் என்பதும் வைரலானது.

அத்தோடு இந்த நிகழ்ச்சியினை தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் தொகுத்து வழங்கி வருகின்றார். அடர்ந்த காட்டுப்பகுதியில் ஆபத்தான சூழ்நிலைகளில் எவ்வாறு உயிர் பிழைத்திருப்பது, அங்கு இருந்து எப்படித் தப்பி வருவது என்பதை விளக்கி ஆவணப்படமாக வெளியிட்டு வருகிறார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, இந்தியப் பிரதமர் மோடி ஆகியோர் ஏற்கனவே பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இதற்கான படப்பிடிப்பு சமீபத்தில் மாலத்தீவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறதும் குறிப்பிடத்தக்கது.