• Apr 20 2024

கார் சேஸிங்கின் போது விபத்துக்குள்ளான பிரபல இயக்குநர்- பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் தான் ரோஹித் ஷெட்டி.இவர் தனது கனவு வெப் தொடரான இந்தியன் போலீஸ் போர்ஸ்' படப்பிடிப்பில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். இதில், பல்வேறு ஆக்ஷன் காட்சிகள், கார் சேஸிங் போன்ற காட்சிகள் உள்ளன. 

இந்த நிலையில் இவர் தன்னுடைய படக்குழுவினருடன், மிகவும் பாதுகாப்பான முறையில், கார் சேஸிங் காட்சியை படமாக்கி கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக இவர் கையில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.உடனடியாக படக்குழுவினர் இயக்குநர் ரோஹித் ஷெட்டியை,  அருகே உள்ள காமினேனி மருத்துவமனையில் அனுமதித்தனர். 


இவரை பரிசோதித்த மருத்துவர்கள், கையில் ஏற்பட்ட காயத்திற்கு உடனடியாக சிகிச்சை அளித்தது மட்டும் இன்றி,  சிறு அறுவை சிகிச்சையும் செய்துள்ளார். சில வாரங்கள் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியதோடு, அன்றைய தினமே டிஸ்சார்ஜ் செய்துள்ளனர். 

இந்த சம்பவம், ரோஹித் ஷெட்டி ரசிகர்கள் மற்றும் பிரபாலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விரைவில் இவர் உடல் நலம் தேறி படப்பிடிப்பில் கலந்து கொள்ள தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement