சூர்யாவுடன் நேரடியாக மோதவுள்ள பிரபல நடிகர்.. யார் தெரியுமா..பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

1794

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே வெற்றி பெற்றதோடு வசூலிலும் அள்ளிக்குவித்திருக்கின்றது.

அந்த வகையில் இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய திரைப்படம் தான் ஜெய்பீம். இந்தத் திரைப்படத்தினை இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியிருந்தார்.இது நடிகர்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பல விமர்சனங்களை பெற்று வருகின்றது.

இவ்வாறாக இருக்கையில் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.

தொடர் வெற்றிக்களுக்கு பின் சூர்யா நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் அனைவரிடமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தான் கூற வேண்டும்.

இந்நிலையில் தற்போது எதற்கும் துணிந்தவன் படத்தின் ரிலீஸ் தேதி வீடியோவுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் ரசிகர்கள் பலரும் கொண்டாட்டத்தில் உள்ளார்களாம்.

இந்நிலையில், இப்படம் ரிலீசாகவுள்ள தேதியில் அருண் விஜய்யின் ‘யானை’ படமும் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.