நடிகையைத் துன்புறுத்திய வழக்கில் முன் ஜாமீன் கோரிய பிரபல நடிகர்-கைது செய்ய வாய்ப்பே இல்லையாம்

95

தென்னிந்திய சினிமாவில் தமக்கென்று ஓர் .டத்தைப் பிடித்த முன்னணி நடிகர்கள் பலர் இருக்கின்றனர். இவர்களில் பலர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். அந்த வகையில் பிரபல நடிகை ஒருவரை கடந்த 2017ஆம் ஆண்டு மர்ம கும்பல் கடத்தி துன்புறுத்திய சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியளித்தது.

இந்த சம்பவத்தில் பிரபல மலையாள நடிகரான திலீப்புக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனால் நடிகர் திலீப் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட பல்சர் சுனி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் திலீப்பின் நண்பரும் பிரபல மலையாள இயக்குநருமான பாலச்சந்திர குமார் அளித்த பேட்டியில் திலீப் தன்னை கைது செய்த போலீஸாரை பழிவாங்க திட்டம் தீட்டியதாக கூறினார். இதனால் நடிகர் திலீப் மீது கேரள போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்தனர்.

இதையடுத்து முன் ஜாமீன் கோரி திலீப் மனுத்தாக்கல் செய்தார். அப்போது, நடிகருக்கு எதிரான புதிய தகவல்கள் குறித்த விவரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறிய நீதிமன்றம் வழக்கு விசாரணையை வரும் செவ்வாய் கிழமைக்கு ஒத்திவைத்தது.

அப்போது அதுவரை திலீப்பை கைது செய்ய மாட்டோம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் செவ்வாய் கிழமை வரை திலீப்பை கைது செய்ய வாய்ப்பில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: