தைப்பொங்கலுக்காக ஏழை மக்களுக்கு உடைகளை வழங்கிய பிரபல நடிகர்

121

தமிழ் சினிமாவில் தமக்கென்று ஓர் இடத்தைப் பிடித்த முன்னணி நடிகைகள் பலர் இருக்கின்றனர். இவர்களில் தாம் நாம் நடித்த சில திரைப்படங்களின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர்களில் முக்கியமானவர் தான் நடிகர் உதயநிதி. இவர் தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகன் என்பதும் தெரிந்ததே.

இவர் கடந்த 2008-ம் ஆண்டு தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக அறிமுகமானார். குறுகிய காலத்தில் விஜய், சூர்யா, கமல் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்ததன் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராக வலம் வந்த இவர், கடந்த 2012-ம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் வெளியான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

இதனை அடுத்து இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா, கெத்து, மனிதன், நிமிர், சைக்கோ என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்துள்ளார். தற்பொழுதும் பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் தற்பொழுது தைப் பொங்கலை சிறப்பிக்கும் பொருட்டு ஏழை மக்களுக்கு உடைகளை வழங்கியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருவதையும் காணலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: