• Mar 28 2023

மனைவியை விவாகரத்து செய்த பிரபல நடிகருக்கு.. அரசியல்வாதியின் மகளுடன் கோலாகலமாக நடந்த திருமணம்.. வெளியானது புகைப்படம்..!

Prema / 3 weeks ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் மனோஜ் மஞ்சு. இவர் முன்னணி தெலுங்கு நடிகரான மோகன்பாபுவின் உடைய மகன் ஆவார். மோகன்பாபு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் மனோஜ் மஞ்சு ஏற்கனவே 2015-இல் பிரணதி ரெட்டி என்பவரை மணந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டமையினால் பின்னர் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். இதனைத் தொடர்ந்து மனோஜ் மஞ்சுவுக்கும், ஆந்திர அரசியல்வாதி பூமா ரெட்டியின் மகளான பூமா மவுனிகாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. மேலும் மனோஜ் மஞ்சு போலவே பூமா மவுனிகாவும் திருமணமாகி விவாகரத்து ஆனவர். 


இந்த நிலையில் மனோஜ் மஞ்சு மற்றும் பூமா மவுனிகா திருமணம் ஐதராபாத்தில் கோலாகலமாக கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது. இதில் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 


அதுமட்டுமல்லாது இந்த திருமணத்தில் மோகன் பாபுவுக்கு விருப்பம் இல்லை என்றும், எனவே திருமணத்துக்கு அவர் செல்லமாட்டார் என்றும் சமூக வலைத்தளங்களில் ஏற்கெனவே தகவல் ஒன்று பரவியது. ஆனால் அதை பொய்யாக்கும் வகையில் திருமணத்தில் மோகன்பாபு கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர்களின் திருமணப் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகின்றது.





Advertisement

Advertisement

Advertisement