ஒரே வருடத்தில் 19 படங்களில் நடித்த பிரபல நடிகர்- இதனை முறியடிக்க போராடி வரும் முன்னணி நடிகர்கள்

97

தமிழ் சினிமாவில் ரசிகர்களைக் கவர்ந்த பல நடிகர்கள் இருகு்கின்றனர். அவர்களில் 1980-களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் மோகன். மேலும் இவர் மூடுபனி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். அதிலும் இவர் நடித்த , நெஞ்சத்தை கிள்ளாததே, மௌன ராகம், உதயகீதம் உள்ளிட்ட படங்கள் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

மேலும் பெரும்பாலும் தமிழில் இவர் மைக் பிடித்து பாடல் பாடும் பாடகர் கதாபாத்திரத்தில் ஏராளமான திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனால் அவர் மைக் மோகன் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.

இந்நிலையில் திரையுலகின் உச்சத்தில் இருந்த நடிகர் மோகன், 1984ஆம் ஆண்டு மட்டுமே 19 படங்கள் நடித்து பிரமாண்ட சாதனை படைத்தார்.இதன்பின் இதுவரை முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும், நடிகர்கள் கமல், ரஜினியால் கூட இந்த சாதனையை முறியடிக்க முடியவில்லை என்று கூறுகின்றனர்.

Mohan at IIFA UTSAVAM Chennai Press Meet

அத்தோடு மோகன் தற்பொழுது குணச்சித்திர வேடங்களில் கூட நடிக்காது சினிமாவை விட்டு விலகியிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.