நயன்தாராவுடன் இணையும் பிரபல நடிகர்-இது அவருடைய 522வது படமாம்..!

1443

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு சிறந்த நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா . இவர் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துப் பிரபல்யமானவர். மேலும் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்த இவர் தற்பொழுது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றார்.

அந்த வகையில் தற்பொழுது அவரது காதலன் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்கில ரெண்டு காதல் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

இந்தப்படத்தில் இவருடன் விஜய்சேதுபதி மற்றும் சமந்தாவும் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்புக்களும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கும் கனெக்ட் படத்திலும் தற்போது கதையின் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நயன்தாரா.

மேலும் இந்த படத்தில் நயன்தாராவுடன் சத்யராஜ் மற்றும் பாலிவுட் நடிகர் அனுபம்கெர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.இந்த நிலையில் அனுபம்கெர், ‛‛நான் நடிக்கும் 522வது படம் நயன்தாராவின் கனெக்ட். நல்ல கதையில், பிடித்தமான குழுவுடன் இணைந்திருக்கிறேன்.

மேலும் இந்த வாய்ப்பை கொடுத்ததற்காக விக்னேஷ் சிவன், நயன்தாரா, அஸ்வின் சரவணன் ஆகியோருக்கு நன்றி என தெரிவித்துள்ளார். அத்தோடு, விக்னேஷ்சிவன், அஸ்வின் சரவணனுடன் இணைந்து எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.