• Dec 09 2022

மாதவனுடன் கூட்டணி வைக்கும் பிரபல நடிகர்…ஒரே படத்தில் இரண்டு கதாநாயகர்களா..?

Listen News!
Aishu / 3 months ago
image
Listen News!

புதிய படத்திற்காக மீண்டும் இணையும் நடிகர் மாதவன் மற்றும் சித்தார்த.படத்தில் மாதவன்,சித்தார்த் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்க உள்ளனர்.
சசிகாந்த் தற்போது இயக்குநராக அறிமுகமாக உள்ளார்

மாதவன் மற்றும் சித்தார்த் நடிப்பில் புதிய படம் உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.தமிழில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது ஒய் நாட் ஸ்டுடியோஸ். இறுதிச்சுற்று, விக்ரம் வேதா, மண்டேலா உள்ளிட்ட பல வெற்றி படங்களை இந்நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இந்த நிறுவனத்தை நிறுவியர் சசிகாந்த்.

வெற்றிகரமாக படங்களை தயாரித்து வரும் சசிகாந்த் தற்போது இயக்குனராக அறிமுகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அத்தோடு இந்தப் படத்தில் மாதவன், சித்தார்த் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்க உள்ளனராம்.

மேலும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளியான இறுதிச்சுற்று, விக்ரம் வேதா ஆகிய படங்களில் மாதவன் நடித்திருக்கிறார். அதேபோல் இந்நிறுவனம் தயாரித்த காதலில் சொதப்புவது எப்படி, காவியத் தலைவன் ஆகிய படங்களில் சித்தார்த் நடித்திருக்கிறார்.

எனவே தயாரிப்பாளர் சசிகாந்த் உடன் மாதவன் மற்றும் சித்தார்த் இருவருக்கும் நல்ல பழக்கம் இருப்பதால் இருவரும் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.