• Sep 21 2023

விபத்தில் சிக்கிய பைக்... சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பிரபல நடிகர்... அதிர்ச்சியில் திரையுலகம்..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

திரையுலகைப் பொறுத்தவரையில் சமீபகாலமாக தொடர் உயிரிழப்புக்கள் நிகழ்ந்த வண்ணம் தான் இருக்கின்றன. அந்தவரிசையில் தற்போது மற்றுமோர் பிரபல நடிகரும் உயிரிழந்துள்ளார்.


அதாவது பல கன்னட படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் லோகேஷ். இவர் சமீபத்தில் புதிய பைக் ஒன்றினை வாங்கி இருந்தார். குறித்த பைக்கில் தனது சொந்த ஊரான தொடுப்பூருக்கு பயணித்து இருக்கின்றார். 

அந்த சமயத்தில் மாண்டியா மாவட்டம் எலியூர் அருகே இவர் பைக்கில் வந்து கொண்டிருந்த போது பைக் விபத்துக்குள்ளாகி லோகேஷ் உயிரிழந்துள்ளார். மேலும் சம்பவ இடத்தில் கை, கால்கள் துண்டாகி ரத்த வெள்ளத்தில் நடிகர் லோகேஷ் இறந்து கிடந்தமை குறிப்பிடத்தக்கது.


இதனையடுத்து தற்போது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது திரையுலத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement