நடிகர் புகழ் விஜய் டிவியின் குக் வித் கோமாளி, கலக்கப் போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளின்மூலம் ரசிகர்களை அதிகமான அளவில் ஈர்த்தவர். எனினும் குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவருக்கு ஏராளமான ரசிகர்களை மட்டுமில்லாமல் பட வாய்ப்புகளை பெற்றுத் தந்துள்ளது.
தற்போது Mr Zoo Keeper என்ற படத்தின்மூலம் ஹீரோவாகவும் மாறியுள்ளார் புகழ். தற்போது இந்தப் படத்தின் நாயகிக்கு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார் புகழ்.
நடிகர் புகழ் விஜய் டிவியின் குக் வித் கோமாளி, கலக்கப் போவது யாரு போன்ற நிகழ்ச்சிகள் மூலம் தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்தியவர்.அத்தோடு ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவரை ஏராளமான ரசிகர்களிடையே கொண்டு சேர்த்துள்ளது.அத்தோடு இந்த நிகழ்ச்சியில் ஷிவாங்கியுடன் இணைந்து இவர் செய்யும் சேட்டைகள் வேற லெவல் ரகம். ரசிகர்கள் இந்த நிகழ்ச்சி சீசனாக மட்டுமில்லாமல் தொடர்ந்து ஒளிபரப்பட வேண்டும் என்று கேட்கும் அளவிற்கு நிகழ்ச்சி அதிக ரீச் ஆகியுள்ளது.
எனினும் தற்போது 4வது சீசனை ஒளிபரப்பி வருகிறது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. அத்தோடு இந்த நிகழ்ச்சியில் அதிகமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில் பாலா இடம்பெறவில்லை. கோமாளியாக இருந்த ஷிவாங்கி குக்காக மாறியுள்ளார். ஆனாலும் கடந்த சீசனில் அதிகமாக இடம்பெறாத புகழ், தற்போது 4வது சீசனில் முழுமையாக கோமாளியாக ஈடுபட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். குக்காக மாறியபோதிலும் தன்னுடைய தங்கை ஷிவாங்கியுடன் இணைந்து மாஸ் காட்டி வருகிறார்.
சினிமாவிலும் வலிமை, எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்கள் புகழ் நடிப்பில் வெளியான நிலையில், தற்போது காசேதான் கடவுளடா படத்தில் ஷிவாங்கியுடன் இணைந்து நடித்து வருகின்றார். இவ்வாறுஇருக்கையில் MR Zoo Keeper என்ற படத்தில் கதாநாயகனாக இணைந்துள்ளார் புகழ். இந்தப் படத்தின் சூட்டிங் பிலிப்பைன்சில் நடைபெற்ற நிலையில் விரைவில் படத்தின் சூட்டிங் நிறைவடையவுள்ளதாக சொல்லப்படுகிறது. இவ்வறுஇருக்கையில் இந்தப் படத்தின் அப்டேட் குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் புகழ் தெரிவித்துள்ளார்.
இப் படத்தின் நாயகி ஷிரின் கஞ்ச்வாலாவின் பிறந்தநாளையொட்டி அவருக்கு தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்துள்ள புகழ், MR Zoo Keeper படம் இருவருக்கும் சிறப்பான நட்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்தோடு இந்தப் படத்தின் ரிலீசுக்காக தான் அதிக ஆர்வத்துடன் காத்திருப்பதாகவும் விரைவில் படத்தின் ஆடியோ லாஞ்ச் நடைபெறவுள்ளதாகவும் புகழ் அப்டேட் தெரிவித்துள்ளார். இதையடுத்து புகழிற்கு ஷிரிங்கா சாவ்லாவும் தன்னுடைய நன்றியை கூறியுள்ளார்.
நடிகர் புகழ், தற்போது குக் வித் கோமாளி ஷோவின் 4வது சீசனில் அதிகமாக காணப்படும் நிலையில் ஒவ்வொரு வாரமும் சிறப்பான பல கெட்டப்புகளை போட்டு வருகிறார். காந்தாரா படத்தின் கெட்டப், பெண் கெட்டப் என அடுத்தடுத்த் இவரது கெட்டப்புகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. எனினும் சமீபத்தில் காந்தாரா படத்தின் கெட்டப்பிற்காக தான் 4 மணிநேரம் மேக்கப் போட்டதாகவும் அதன் மேக்கப் வீடியோவையும் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்திருந்தார் புகழ்.
Listen News!