• Mar 26 2023

எழில்-வர்ஷினி திருமணத்தை நிறுத்தப் போவது இவர் தானாம்.. பாக்கியலட்சுமி சீரியலில் நடக்கப் போகும் அதிரடித் திருப்பம்..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

சீரியலுக்கே பேர் போன சேனல் என்றால் அது விஜய் தொலைக்காட்சி தான். இதில் ஒளிபரப்பாகும் அணைத்து சீரியலுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவ்வாறு ரசிகர்கள் பலரைக் கவர்ந்த ஒரு ஹிட் தொடர் தான் 'பாக்கியலட்சுமி'. 

இந்த சீரியலானது எப்போதுமே விறுவிறுப்பிற்கும், பரபரப்பிற்கும் பஞ்சமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது. இதில் பாக்கியா தனியாக தனது குடும்பத்தை பார்த்து வர கோபியால் அடிக்கடி பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.


அதுமட்டுமல்லாது தற்போது அவர் வீட்டை விற்க போகிறேன் என்று கூறியதால் பண கஷ்டத்திற்காக எழில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லாமல் வர்ஷினியை திருமணம் செய்ய ஒப்புக் கொள்கிறார். இதனைத் தொடர்ந்து திருமண வரவேற்பு இந்த வாரம் முடிந்துவிட்டது. 

மேலும் எழிலுக்கு வர்ஷினியுடன் திருமணம் நடக்கப்போவதை அறிந்து கொண்ட அமிர்தா அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார். அவரை கண்ட எழிலின் பாட்டி அமிர்தாவை மிகவும் மோசமாக கண்டபாட்டுக்கு திட்டுகிறார். இவ்வாறாக இன்றைய எபிசோட் அமைந்திருந்தது.


இதனைத் தொடர்ந்து இந்த சீரியலில் அடுத்த வாரம் திருமணத்தில் அதிரடி திருப்பங்கள் ஏற்படும் என்பது போல் ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர். அந்தவகையில், இவ்வாறான ஒரு நேரத்தில் தான் பாக்கியா கோபியிடம் சென்று "பிடிக்காமல் என்னை திருமணம் செய்தீர்கள், வாழ்க்கை மோசமாக அமைந்தது. இப்போது என் மகன் பணத்திற்காக பிடிக்காத ஒரு திருமணத்தை செய்துகொள்ள போகிறான்" என்று கூறுகிறாராம்.

பாக்கியா இவ்வாறு கூறியதும் இதனை யோசித்த கோபி தனது வாழ்க்கை போல் மகனுக்கு அமைய கூடாது என்று திருமணத்தை உடனே நிறுத்துகிறார் என கூறப்படுகிறது. ஆனாலும் இந்த திருப்பம் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. ஆகையால் என்ன நடக்கப் போவது என்பதை சற்றுப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement

Advertisement