வறுமை என்று கூறிய அனைத்தும் பொய்யா; தாமரையை கிழித்தெடுக்கும் நெட்டிசன்கள்-புகைப்படத்துடன் வெளியான ஆதாரங்கள்..!

57104

பிக்பாஸ் நிகழ்ச்சி 84 நாட்களை கடந்து சென்றுகொண்டு இருக்கிறது. இந்த சீசனில் தெரிந்த முகங்களை விடை தெரியாத முகங்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் ஆண் போட்டியாளர்களை விட பெண்கள் தான் அதிகம் இருந்தனர்.தற்போது பெண் போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேறி ஆண் போட்டியாளர்களே அதிகம் உள்ளனர்.

அந்த வகையில் தாமரை செல்வியும் ஒருவர். இவர் மேடை நாடக கலைஞர். மேலும், இவர் பிக் பாஸில் நுழைந்த ஒரு சில நாட்களிலேயே தனது வெள்ளந்தியான குணத்தால் அனைவரையும் கவர்ந்தார் என்று தான் கூற வேண்டும்.

ஆரம்பத்தில் அப்பாவி போல இருந்த தாமரை பல வாரங்களை கடந்து வந்த தற்போது டாப் 8 போட்டியாளர்களின் ஒருவராக வந்து இருப்பது பாராட்டாக்கூடிய விடயம் ஒன்று தான். அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த சில நாட்களிலேயே கடந்து வந்த பாதை டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் கடந்து வந்த பாதை குறித்து பேசி இருந்தனர்.

எனினும் அந்த வகையில் இந்த டாஸ்கில் பேசிய தாமரை தன் குடும்பத்தினராலும் கணவராலும் அனுபவித்த கஷ்டங்களை பற்றி பிக்பாஸ் வீட்டுக்குள் கூறியிருந்தார்.

வறுமை காரணமாக சிறு வயதிலேயே தாமரை செல்வியை நாடகத்தில் சேர்த்துவிட்டுள்ளனர். அதன் பின்னர் ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தைக்கு தகப்பனான ஒருவரை திருமணம் செய்துள்ள தாகவும் அவருடன் ஒரு மகனையும் பெற்றுள்ளார் என்று தாமரை தெரிவித்தார்.

எனினும் அதன் பின் அந்த வாழ்க்கை பிரச்னையில் முடியவே வேறு ஒருவருடன் திருமணம் செய்து கொண்டார். தாமரையின் இரண்டாம் கணவர் சாரதி ஒரு ஜவுளி கடையில் தான் வேலை பார்த்து வந்தார்.

அதே போல சமீபத்தில் பிக் பாஸ் வீட்டிற்கு வந்து இருந்தார். அப்போது தாமரை இவரிடம் பைனான்ஸ்லாம் சரியா கட்ரயா, வாரா வாரம் கறி சாப்புடுறீங்களா என்று கேட்டு இருந்தது பலரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது என்று தான் கூற வேண்டும்.

அதே போல தாமரை செல்வி, கடந்த சில வாரங்களுக்கு முன்னர் டாஸ்க் ஒன்றில் வென்று கேஸ் அடுப்பை பரிசாக பெற்றார்.

அப்போது ‘எங்கள் வீட்டில் அடுப்பே இல்லை என்று கூறி இருந்தார். ஆனால், அவர் அறிமுக வீடியோவில் அவரது வீட்டில் கேஸ் அடுப்பு இருந்ததை நெட்டிசன்கள் சுட்டி காட்டினர். எனினும் இப்படி ஒரு நிலையில் தாமரை செல்வியின் வீட்டின் புகைபடங்கள் வெளியாகி இருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: