• Apr 20 2024

அஜித் கழட்டிவிட்டாலும் கடைசியில் விக்கிக்கு கைகொடுத்த கமல்...வெளியான சூப்பர் அப்டேட்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

அஜித்தின் ஏகே 62 படத்தில் இருந்து நீக்கப்பட்ட விக்னேஷ் சிவனுக்கு, நடிகர் கமல்ஹாசன் வாய்ப்பளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடைசியாக ரிலீஸ் ஆன திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். விக்னேஷ் சிவன், நயன்தாரா, சமந்தா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படம் கடந்தாண்டு ரிலீசாகி வசூலையும் வாரிக் குவித்தது. மேலும் அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் அஜித்தின் ஏகே 62 திரைப்படத்தை இயக்க கமிட் ஆனார் விக்னேஷ் சிவன். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டிருந்தது.

இப்படத்தின் ஷூட்டிங்  ஆரம்ப இருந்த சமயத்தில், விக்னேஷ் சிவனை அப்படத்தில் இருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக மகிழ் திருமேனியை கமிட் செய்து அதிரடி காட்டினார் அஜித். அத்தோடு விக்னேஷ் சிவன் சொன்ன கதை திருப்தி அளிக்காததால், அவரை ஏகே 62 படத்தில் இருந்து நீக்கிவிட்டதாக சொல்லப்படுகின்றது. அஜித் படத்தில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், விக்னேஷ் சிவன் அடுத்ததாக யாருடன் கூட்டணி அமைக்க உள்ளார் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

எனினும் அந்த வகையில் சமீபத்திய தகவல் படி விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள புதிய படத்தில் லவ் டுடே நாயகன் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக  நடிக்க உள்ளதாக  சொல்லப்படுகின்றது. இது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்து கைவிடப்பட்ட எல்.ஐ.சி என்கிற திரைப்படத்தை தான் தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து விக்கி எடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த படம் எடுக்க அதிக பட்ஜெட் செலவாகும் என்பதால் அந்த சமயத்தில் இப்படத்தை லைகா நிறுவனம் கைவிட்டது. இவ்வாறுஇருக்கையில்  தற்போது அதே பட்ஜெட்டில் அப்படத்தை தயாரிக்க நடிகர் கமல்ஹாசன் முன்வந்துள்ளதாக கோலிவுட்டில் ஒரு தகவல் பரவி வருகிறது. பிரதீப் ரங்கநாதன் - விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாகவுள்ள இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் ரூ.45 பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement