தமிழ், தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள் தான் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடி. இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்தாலே வெற்றி கூட்டணி உறுதி. கீதா கோவிந்தம் படம் சூப்பர் ஹிட்டானது. அதன் பிறகு இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
விஜய் தேவரகொண்டா தற்போது ‘குஷி ‘ படத்தின் புரமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
நடிகை சமந்தா தற்போது அமெரிக்காவில் இருப்பதால் விஜய் தேவரகொண்டா புரமோஷனை முழுவதுமாக கவனித்து வருகிறார். இந்நிலையில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுடன் நடிக்க விருப்பம் தெரிவித்தார். குஷி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவரிடம், ராஷ்மிகா பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
மீண்டும் எப்போது இருவரும் இணைந்து நடிப்பீர்கள்? அதற்கு அவர், “ராஷ்மிகா மந்தனாவுடன் திரையைப் பகிர காத்திருக்கிறேன். இருந்தாலும் நல்ல ஸ்கிரிப்ட் தேவை. அப்படியானால், நாங்கள் இணைந்து செயல்படுவோம்”என்றார். இதை விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Listen News!