• Apr 25 2024

நீ துப்பினாலும் நான் துடைச்சுக்குவேன்.... தாறுமாறாக அசீமை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசன் ஆனது ஆரம்பமாகி கலகலப்பிற்கும், விறுவிறுப்பிற்கும் கொஞ்சமும் பஞ்சமில்லாத வகையில் இன்றுடன் 3ஆவது வாரத்தை நிறைவு செய்யக் காத்திருக்கின்றது. இதில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கின்றார்கள். மேலும் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக அசீம் காணப்படுகின்றார்.


அசீமின் பேச்சுக்கள் போட்டியாளர்களுக்கு மட்டுமன்றி, பார்வையார்களுக்கும் வெறுப்பினைத் தூண்டுகின்றது. அந்தவகையில் நேற்று கமல்ஹாசன் அசீமை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலமாக பேசிவிட்டார். 

அதுமட்டுமல்லாது கடந்த வாரம், தானாக முன்வந்து ரெட் கார்டை எடுத்து சீன் போட்டு கமல்ஹாசனை ஆஃப் செய்த அசீமை, கதறி அழாத குறையாக வெளுத்துவிட்டார் கமல் ஹாசன். இருப்பினும் தன்னுடைய பிழையை உணர்ந்து விட்டேன் என்று கூறி விட்டு மறுபடியும் மறுபடியும் தப்பு செய்து வருகின்றார் அசீம். 

அந்தவகையில் இன்றைய ப்ரோமோவிலும் அசீம் பெரிய லெஜண்ட் போல பேசியதைப் பார்த்து கடுப்பான நெட்டிசன்கள் பலரும் அவரை ட்ரோல் செய்து கிண்டலடித்து வருகின்றனர். அதில் ஒருவர், அசீமின் போட்டோவை போட்டு துப்பிக்கோ...தொடச்சுக்குவேன் கேசு.. என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.


அதுமட்டுமல்லாது இன்னொருவர் "இன்னைக்கு இரண்டு ப்ரேமோவிலும் அசீம் தான் அடிக்கிறாங்க, இன்னைக்கும் கமல் வறுத்தெடுக்க போறாரு இவன் பண்ணதுக்கு ரெண்டு நாளைக்கும் தெளிய தெளிய வச்சு அடிக்குறானுங்க இவன் பேசுன பேச்சுக்கு இன்னும் ரெண்டு வாரத்துக்கு அடிக்கலாம்" என பதிவிட்டுள்ளார்.


அதனைத் தொடர்ந்து இரண்டாவது ப்ரோமோவையும் பார்த்து டென்ஷனான ஒரு ரசிகர் "இந்த கேள்வியை விட ஆளுக்கு ரெண்டு மிக்சர் பொட்டலத்தை கையில கொடுத்து இதை யாருக்கு கொடுப்பிங்கன்னு கேளுங்க கமல் சார் ஏகபட்ட பேர் சிக்குவாங்க" என பதிவிட்டுள்ளார்.


அத்தோடு ராபர்ட் மாஸ்டர் "நான், அவன் கிட்ட பேசினா மரியாதை போயிடும் அதனால் என் மரியாதையை காப்பாத்திக்கிறேன்" என கூறியுள்ளதை சுட்டிக்காட்டி உள்ள ஒரு இணையவாசி, அசீமுக்கு திரும்புற இடமெல்லாம் சாட்டையடி என பதிவிட்டுள்ளார்.

இவ்வாறாக அசீமை பலரும் கழுவி ஊற்றும் விதமாகக் கிண்டலடித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement