• Mar 29 2024

எங்க அப்பாவை விட நான் தான் அழுறது கூட- ஓபனாகவே பேசிய சிம்பு-அடடே இவ்வளவு நல்ல மனுசனாய்யா......

stella / 11 months ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில், நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், பாடகர், தயாரிப்பாளர் என பன் முக கலைஞராக இருக்கும் டி.ராஜேந்தரின் மூத்த மகன் தான் சிலம்பரசன்.பள்ளி வாசலை மிதிப்பதற்கு முன்பே திரையுலக வாசலை மிதித்து விட்டார் சிம்பு. தன்னுடைய ஒரு வயதிலேயே தந்தை டி.ஆர். இயக்கி, நடித்த 'உறவை காத்த கிளி 'படத்தில் குழந்தையாக நடித்திருந்தார்.

இதை தொடர்ந்து, குழந்தை நட்சத்திரமாக. மைதிலி என்னை காதலி, என் தங்கை கல்யாணி, ஒரு தாயின் சபதம்,  சம்சார சங்கீதம், எங்க வீட்டு வேலன், பெற்றெடுத்த பிள்ளை, ஒரு வசந்த கீதம், என சுமார் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.


பின்னர், கடந்த 2003 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் கதாநாயகனாக காலடி எடுத்து வைத்த சிம்பு இடையில் பல்வேறு சர்ச்சைகள் மற்றும் அப் அண்ட் டவுன்சை சந்தித்தாலும், ரசிகர்கள் மனத்தில் இன்று வரை சிம்மாசனம்மிட்டு அமர்ந்துள்ளார்.அப்பா 8 அடி பாய்ந்தால் பிள்ளை 18 அடி பாயும் என்கிற பழமொழிக்கு ஏற்ப, தனது தந்தையைப் போல் பல திறமைகளை கொண்டவாராக திரையுலகில் அசத்தி வருகிறார் .

கடைசியாக சிம்பு நடிப்பில், இம்மாதம் வெளியான பத்து தல திரைப்படத்தில், இத்தனை வருடங்களில் இதுவரை பார்த்திடாத சிம்புவை பார்க்க வைத்தது. மேலும் தனித்துவமான கெத்தான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.அத்தோடு அண்மையில் ரசிகர்களுக்கு பிரியாணி விருநதும் அளித்து ரசிகர்களைக் கவர்ந்திருந்தார்.


இந்த நிலையில் இவர் அண்மையில் ஓர் பேட்டியளித்திருந்தார். அதில் சின்ன சென்ட்ரிமென்ட் என்றாலே படம் பார்த்தே அழுதிடுவேன்.பிக்பாஸ்ல இருந்து யாரும் வெளில வந்தால் அழுதிடுவேன். நான் அழுறதை யாரும் தப்பா சொன்னாலும் எனக்கு கவலை இல்ல. எனக்கு அந்த டைம்ல அழனும் என்றால் அழுதிடுவேன். சில டைம்ல என்னால அழுகையை கன்ரோல் பண்ணனும் என்றால் பண்ணிடுவேன். எமோஷனல முடிஞ் அளவுக்க தான் கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளதைக் காணலாம்.







Advertisement

Advertisement

Advertisement