• Apr 19 2024

10 வருஷத்துக்கு அப்புறமும் அதே ஆப்ஷன்தான்’ கிருத்திகா போட்ட பதிவு- பாவம் உதயநிதி ஸ்டாலின்!

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகராகவும் அரசியல்வாதியாகவும் வலம் வருபவர் தான் உதயநிதி ஸ்டாலின்.இவர் நடிப்பில் தற்பொழுது கலகத் தலைவன் என்னும் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் 18ம் திகதி வெளியாகவுள்ளதால் படத்தின் ப்ரமோஷன் பணியில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இது தவிர தம்முடைய ரெட் ஜெயன்ட் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல்வேறு படங்களை தயாரித்தும் விநியோகித்தும் வருகிறார்.இப்படத்தை அடுத்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் என்கிற திரைப்படத்தில் உதயநிதி நடிக்கவுள்ளார்.


இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் அவருடைய மனைவி கிருத்திகா உதயநிதி இருவரும் பேசிக்கொண்ட பத்து வருடத்திற்கு முந்தைய twitter பதிவு தற்போது வைரலாகி வருகிறது. உதயநிதி ஸ்டாலினை காதலித்து திருமணம் செய்து கொண்ட கிருத்திகா உதயநிதி தமிழ் சினிமாவில் குறிப்பிட தகுந்த பெண் இயக்குநராக இயங்கி வருகிறார். 

இவர் வணக்கம் சென்னை, காளி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அண்மையில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் பேப்பர் ராக்கெட் திரைப்படம் ஓடிடியில் வலைத் தொடராக வெளியாகி வரவேற்பு பெற்றது.


இந்நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டுவிட்டரில் ரசிகர்களுடன் உதயநிதி கேள்வி பதில் அமர்வில் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது டின்னருக்கு என்ன வேண்டும் என்று கிருத்திகா அதில் வந்து ரிப்ளை செய்ய, அதற்கு நான்கு ஆப்ஷன்களும் கொடுத்திருந்தார். 

அந்த நான்கு ஆப்ஷனிலும் a)தோசை b)தோசை c)தோசை d)தோசை என்று இருந்தது. இதுதான் இப்போது டுவிட்டரில் வைரல் ஆகி வருகிறது. இதை பார்த்த கிருத்திகா உதயநிதி குறிப்பிட்ட இந்த பதிவை பகிர்ந்து 10 வருடங்களுக்குப் பிறகும் இதே ஆப்ஷன்கள்தான் என்று வேடிக்கையாக பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.



Advertisement

Advertisement

Advertisement