• Sep 21 2023

எங்கம்மா ஸ்ரீலங்காவில இருந்து வந்தவங்க, இது எங்களுடைய வழக்கம்- நடிகை கௌசல்யா சொன்ன சுவாரஸியமான தகவல்

stella / 1 week ago

Advertisement

Listen News!


தமிழில் சினிமாவில் 90 களில் கலக்கி வந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை கௌசல்யா. விஜய், கார்த்தி, பிரபுதேவா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர்.

இவரின் முதல் படம் மலையாளமாக இருந்தாலும், இவரை வளர்த்து விட்டது தமிழ் சினிமா தான். இவர் 'காலமெல்லாம் காதல் வாழ்க' படத்தில் 'கௌசல்யா' என்கிற பெயரில் அறிமுகமானார். இந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, கவிதா என்கிற தன்னுடைய பெயரை கௌசல்யா என்றே மாற்றிக்கொண்டார்.


தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ள இவர், 39 வயதை எட்டிய பின்பும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல், வாழ்ந்து வருகிறார்.இதுகுறித்து, அவர்கூறுகையில் "திருமணம் செய்து கொண்டு, கணவன், குழந்தை, என குறுகிய வட்டத்திற்குள் வாழ நினைக்கவில்லை. தற்போது சுதந்திரமாக வாழ்த்து வருவதாக கூறியிருந்தார்.


இந்த நிலையில் தற்பொழுது ஒரு பேட்டியளித்துள்ளார். அதில் அவருடைய வீட்டில் சிவன் சிலை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கேட்ட போது எங்க அம்மா ஸ்ரீலங்காவில் இருந்து வந்தவங்க, அப்போ அவங்களுக்கு கலாச்சாரம் எல்லாம் தெரியும். அவங்க சொல்லிக் கொடுத்தது தான். எனக்கும் கடவுள் நம்பிக்கை நிறைய இருக்கு வீட்டி எல்லோரும் சேர்ந்து தான் பூஜை பண்ணுவோம்.இருக்கிற வரைக்கும் சந்தோஷமாக இருந்திட்டு போய்டனும் என்பது தான் என்னுடைய விருப்பம் என்றும் அதில் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement